ஜெயங்கொண்டம் நகரில் திராவிட கழகம் சார்பில் இது தான் ஆர் எஸ் எஸ் - பாஜாக ஆட்சி, இது தான் திராவிடம்,திராவிட மாடல் ஆட்சி பரப்புரை கூட்டம் நடைபெற்றது


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில், அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், இதுதான் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. ஆட்சி,இதுதான் திராவிடம், திராவிட மாடல் ஆட்சி பரப்புரை பயணம் மற்றும் பெரியார் உலகத்திற்கு நிதி வழங்கும் விழா, பண்பாட்டு பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் தி.க மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம் அனைவரையும் வரவேற்றார்.இக் கூட்டத்திற்கு தி.க மாவட்ட காப்பாளர் சி.காமராஜ்  தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக தகைசால் தமிழர்,தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார்.

இந்நிகழ்வில்  போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தி.க பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகர்,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன்,அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆ.சங்கர்,விசிக மாவட்ட செயலாளர் இரா.கதிர்வளவன்,CPM மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல்,CPI மாவட்ட செயலாளர் க.நடராஜன் மற்றும் தி.க மாநில,மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள்,தோழமை கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



Post a Comment

0 Comments