ராமநாதபுரம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சிஒன்றிய அலுவலகத்தின் முன்பு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தினை திட்டமாக மாற்றி ராவ் ஜி ராம்ஜி என்ற பெயரில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை மாற்றம் செய்த பிஜேபி ஒன்றிய அரசாங்கத்தை கண்டித்து கமுதி ஒன்றிய முன்னாள் தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமையிலும் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் முன்னிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பாக பெரும் திரளான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் இரா முத்து விஜயன் கிளைசெயலாளர் ஆலடி ஈஸ்வரன் உட்பட காங்கிரஸ் மதிமுக விடுதலைசிறுத்தை முஸ்லீம்லீக் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் கூட்டணிகட்சியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments