தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தனது கடைசி படமாக கருதப்படும் ‘ஜன நாயகன்’ படத்தின் பணிகளில் தீவிரமாக உள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27-ம் தேதி மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.இதில் விஜய் அரசியல் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விழாவில் அரசியல் குறித்து பேசக்கூடாது என மலேசிய அரசு நிபந்தனை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, தேனியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை நமீதாவிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அவர், விஜய் ஒரு மிகச்சிறந்த நடிகர் என்றும், பிரபுதேவா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் போல நடனத்தில் சிறந்து விளங்கக்கூடியவர் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும், விஜய் அரசியலுக்குச் சென்று சினிமாவை விட்டு விலகுவது தமிழ் சினிமாவிற்கு ஒரு பேரிழப்பு தான் என்று நமீதா வருத்தத்துடன் தெரிவித்தார்.

0 Comments