தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி கிருஷ்ணம்மாள் மருத்துவமனை எதிரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தேனி வடக்கு மாவட்ட திமுக அமைப்பாளர் மருத்துவர் பாண்டியராஜ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கழகத் தலைவர் தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ உணவு விருந்து வழங்கப்பட்டது.
இந்தநிகழ்வில் தேனி வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டி, தேனி நகர செயலாளர்கள் பாலமுருகன், நாராயண பாண்டியன், பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், பெரியகுளம் நகர செயலாளர் முகமது இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், தேனி அல்லிநகரம் நகராட்சி துணை சேர்மன் செல்வம், பெரியகுளம் ஒன்றிய முன்னாள் சேர்மன் முத்துராமலிங்கம், தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் தலைவர் அன்பழகன், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் ராஜன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் இராமதாஸ் உட்பட ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.



0 Comments