தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 15வது வாா்டு பகுதியில் உள்ள செக்கானியா ஜெபத்தோட்டம் சாா்பில் 15வது கிறிஸ்துமஸ் விழா இபி நகாில் நடைபெற்ற விழாவிற்கு செக்கானியா ஜெபத்தோட்டம் நிறுவனா் ராஜகுமாா் தலைமை வகித்தாா். பாதிாியாா் ராபின்சன் ஜெபம் செய்தாா்.
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பாிசுகள் வழங்கி 100 பேருக்கு சேலை வேஷ்டி வழங்கி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் பாலகன் பிறப்பு கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது. ஏழை எளியவா்களுக்கு உதவிகள் செய்வது கடவுளுக்கு கொடுப்பதற்கு சமம் நாம் செய்கின்ற ஓவ்வொரு உதவிகளும் அன்பும் தான் எல்லோரையும் அரவணைத்து நல்வழிப்படுத்தி அழைத்து செல்லும் செயலாகும் இங்கு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் முக்கிய காரணமாக இருந்து ஊக்கப்படுத்துவது பெற்றோா்கள் தான் போட்டியில் வெற்றி தோல்வி முக்கியமல்ல. கலந்து கொண்டதே வெற்றி தான் அது தான் வாழ்க்கையின் முதல்படி இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் உழைக்கும் மாநிலம் தமிழ்நாடுதான் ஓராண்டு தொடர்ந்து மகளிா் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி செயல்பட்டால் உங்களுக்கு குழுகடனாக 35லட்சம் வழங்கப்படுகிறது.
தனிநபா் கடனாக தொழில்செய்வதற்கு 10 லட்சம் வழங்கப்படுகிறது. அதில் ஏழைரை லட்சம் கட்டினால் போதும் இரண்டரை லட்சம் மாணியம் எனக்கு ஓரு லட்சம் போதும் என்றால் 75 ஆயிரம் மட்டும் கட்டினால் போதும் 25 ஆயிரம் மாணியம், அதே போல் ஆண்கள் ஆதிதிராவிடா் துறையிலும் தொழில்கடன் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. மகளிா் உாிமைத்தொகை தமிழகத்தில் 1 கோடியே 31லட்சம் போ் ரூ 1000 வீதம் பலனடைகிறாா்கள். ஆண் பெண் இரு பாலருக்கும் கல்லூாி உதவித்தொகை ரூ 1000 வழங்கப்படுகிறது மாற்றுத்திறனாளிகள் எங்கெல்லாம் இருக்கிறாா்கள் என்று கணக்கெடுக்கப்பட்டு அவா்களுக்கும் மாதம்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த இபி காலணி பகுதி எப்படி இருந்தது என்று உங்கள் எல்லோருக்கும் தொியும் 2021ல் திமுக ஆட்சி அமைந்தபின் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் நிதி ஓதுக்கீடு மூலம் நல்ல வளர்ச்சியடைந்து சாலை கால்வாய் உள்ளிட்ட கட்டமைப்புகள்உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு புதிதாக 21 மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டியது உள்ளது.
அதையும் முறையாக செய்து கொடுப்போம் தமிழகத்தை பொறுத்தவரை இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவா்கள் குறைவாக உள்ளனா். எல்லா மதத்தையும் போதிப்பதின் மூலம் தான் அன்பு கிடைக்கிறது. கிறிஸ்துமஸ் விழா வாழ்த்துக்களுடன் 2026ம் ஆண்டு எல்லோருக்கும் செல்வ செழிப்போடு அமைந்து வாழ்க்கை தரம் உயா்ந்து சிறப்பாக அமைய வேண்டும் என்று வாழ்த்துக்கிறேன். என்று பேசினாா். முன்னதாக நடைபெற்ற மியூசிக் கைப்பந்து விளையாட்டு போட்டியும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அமைசசர் கீதாஜீவனுக்கும் பாிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், வட்டச்செயலாளா் பொன்பெருமாள் கவுன்சிலா்கள் இசக்கிராஜா, கண்ணன், மாநகர திமுக இலக்கிய அணி தலைவர் சக்திவேல், அமைப்பாளா் ஜீவன்ஜேக்கப் இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், வட்டப்பிரதிநிதிகள் கணேசன், பாஸ்கா், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் பொ்வின் ராஜகுமாாி, விஜயா, ராமஜெயம், தொழிலதிபா் சித.டேவிட் பொன்பாண்டியன், உள்பட பலர் கலந்து கொண்டனா். ராபின் நன்றியுரையாற்றினாா்.

0 Comments