திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மூன்றாக பிரித்து உத்தரவு பிறப்பித்தார் அதன் ஒரு பகுதியாக கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளராக பல்லவாடா ஜெ. ரமேஷ் குமார் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கழக நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றார்.
தேர்வாய், கண்ணன்கோட்டை, மாதர்பாக்கம், நமலுர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் சென்று கிளைக் கழக நிர்வாகிகளை கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் தலைமையில் சந்தித்து வாத்துக்களை பெற்றதோடு முன்னதாக பேசிய இங்கு கும்மிடிப்பூண்டி.முன்னாள் எம்எல்ஏ கே எஸ் விஜயகுமார் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைய கழக நிர்வாகிகள் அயராது பாடுபட வேண்டும் என அப்போது அவர் கேட்டுக் கொண்டார் இதில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய கழக செயலாளர்கள் டி.சி மகேந்திரன், எஸ் எம் ஸ்ரீதர், மாவட்ட இணை செயலாளர் சியாமளா தன்ராஜ் ,மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் டேவிட் சுதாகர், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் சேதுபதி அவைத் தலைவர் ஏழுமலை. ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ்.ஒன்றியம் பொருளாளர் உலகநாதன் தேர்வாய் கிளை செயலாளர்கள்,சினுபிள்ளை,மோகன்தாஸ்,காணகராஜ்,இந்திரன்,கட்டையான்,கமலநாதன்,தானவேல்,உதயகுமார்,டில்லிபாபு,கட்டையான்,விமல்,குமரேசன்,அருன்,மணிகண்டன்உள்ளிட்ட கிளை கழக செயலாளர்கள் கழக நிர்வாகிகள் என பெருந்திரளாக கழக நிர்வாகிகள் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் .
முன்னதாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவப்படத்திற்கும் சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.





0 Comments