சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள குமரப்பட்டி கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் குடியிருக்கும் பகுதி மதுரை மாவட்டம் என்றாலும் இக்கிராமத்தின் அனைத்து மக்களும் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பாலாறு மறுகரையில் பொது மயானம் உள்ளது. பல ஆண்டுகளாக இறந்தவர்களின் சடலங்களை பாலாற்றை கடந்து தான் கொண்டு வந்து நல்லடக்கம் செய்கின்றனர். சமீபத்தில் வடகிழக்கு பருவமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது இடுப்பு அளவு வரை தண்ணீர் சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இறந்த ஒருவரின் உடலை பொது மயானத்திற்கு கொண்டு செல்ல பாலாற்றில் வரும் இடுப்பளவு தண்ணீரில் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்லும் அவல நிலை உள்ளது.
பருவமழை காலங்களில் இறந்தவர்களின் உடலை சுமந்து கொண்டு இடுப்பளவு தண்ணீரில் கடந்து சென்று தான் அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதில் ஆண்டு தோறும் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும். இது குறித்து பலமுறை ப மதுரை மாவட்டத்திற்கும், சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திடமும், பல அரசியல் தலைவர்கள், அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே பொது மக்களின் நலன் கருதி பொது மயானத்திற்கு பாலாற்றை கடந்து செல்ல முறையான பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments