ஈரோட்டில் நாளை (டிசம்பர் 18) நடைபெற உள்ள விஜய் மக்கள் சந்திப்பை முன்னிட்டு, நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து ஈரோடு வந்தார். அப்போது அவருக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக நிர்வாகிகளிடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.ஏற்பாடுகளை பார்வையிடும் போது, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நிர்வாகி, புஸ்ஸி ஆனந்துக்கு பூமாலை அணிவிக்க முயன்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரோடு மாவட்ட நிர்வாகிகள், மாலையிடுவது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் வாக்குவாதமாக மாறியது.இதையடுத்து, புஸ்ஸி ஆனந்துக்கு அணிவிக்க முயன்ற பூமாலை, மீண்டும் அந்த நிர்வாகிக்கே அணிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தர்மபுரி மாவட்ட நிர்வாகி, தன் கையில் இருந்த மாலையை தூக்கி வீசி அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள விஜய் மக்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

0 Comments