தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில் கண்டறியப்பட்ட உரல் போன்ற தொட்டி ஊர் பொதுமக்கள் வாயிலாக நாம் கண்டறிந்த சுண்ணாம்பு மற்றும் சலித்த மணல் கலந்து செய்யப்பட்ட, மிக தொன்மையான ஹரப்பா கலாச்சாரம் போன்ற, கலைநயம் கொண்ட உரல் போன்ற அமைப்பு குறித்த காலக்கட்டங்களை கண்டறிய நம் வைப்பார் நாகரீகத்தின் தொன்மை குறித்த உண்மைகளை உலகுணர்த்தலாம் என்றார்.
இத்தகைய வடிவமைப்பானது பூந்தொட்டி மற்றும் தூண்கள் அடிப்பாகம் போன்ற அமைப்புகளுக்கு ஒத்த அமைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது என்றும்,
பொதுவாக நமது தூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில் இத்தகைய சலித்த மணல் மற்றும் சுண்ணாம்பு கலந்து செய்யப்பட்ட கட்டிடங்களின் சிதைவுகள், தொடர் சாலை சிதைவுகள், பீடக்கற்கள், குமிழ்தூம்புகள், சில தெய்வத்திருமேனிகள், நங்கூரம் போன்ற முக்கியமான அமைப்புக்கள் கண்டறிந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்பது இந்த கீழ்பட்டினம் எனப்பட்ட வைப்பார் மருத மற்றும் நெய்தல் நாகரீகத்தின் தொன்மையானது சிந்து நாகரீகத்தினை விட மூத்த மேம்பட்ட நாகரீகம் என நிரூபிக்க வல்லவை எனலாம் என்றும்,
எனவே இந்த பகுதியில் ஆங்காங்கே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ள தொன்மையான இத்தகைய தொல்லியல் பொக்கிஷங்களை கண்டறிந்து ஆவணப்படுத்திட தமிழக தொல்லியல் துறையின் பரந்த கள ஆய்வுகள் அவசியம் என்றார்.



0 Comments