திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவானது இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி முழுவதும் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது அந்த வகையில், இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி ஊராட்சி, சேதுக்கரை ஊராட்சி, ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களை சந்தித்து கழக அரசின் நான்கு அரைஆண்டு சாதனைகளை எடுத்துரைத்து, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார் ராமநாதபுரம் மாவட்டகழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் .
இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் உடனிருந்தனர்.



0 Comments