முதுகுளத்தூர் ஆற்றுப்பாலம் அருகே பேருந்து நிழற்குடை அமைத்துதர பொதுமக்கள் கோரிக்கை




இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஆற்றுப் பாலம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அபிராமம், செல்வநாயகபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பரமக்குடி, மதுரை போன்ற வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது நிழற்குடை இல்லாத காரணத்தால் அவர்கள் கடும் வெயிலும், மழைக்காலத்திலும் நீண்ட நேரம் நின்று பஸ்சுக்கு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள், பெண்கள், பள்ளி மாணவ மாணவியர்கள்  உள்ளிட்டோர் அதிகமாக பாதிக்கப்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்துதரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments