ராமநாதபுரம்: கடலாடி அருகே கோயில் உண்டியல் உடைப்பு..... போலீசார் விசாரணை

 


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள ஏ.புனவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட ஏந்தல் கிராமத்தில் பொன்ந்திகாளியம்மன்  கண்ணாயிரமூர்த்தி அய்யனார் கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது இந்தகோயில்  இந்தபகுதியில் உள்ள 110 கிராமங்களுக்கு பாத்தியப்பட்டது இந்தகோயிலுக்குள் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் உள்ளே புகுந்து அங்கு வைக்கப்பட்டு இருந்த உண்டியலை உடைத்து சேதப்படுத்திஉள்ளனர்.

மேலும் அங்கிருந்த பொன்னந்தி காளியம்மன் அருகேயுள்ள உண்டியலையும் உடைத்து கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றனர் இந்த சம்பவம் நடப்பதற்கு முதல்நாள் தான் கோயில் நிர்வாகத்தினர் உண்டியல்களில் இருந்த பணத்தை எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது       இதுகுறித்து கடலாடி காவல்நிலையத்தில் கோயில் நிர்வாகி பழனிச்சாமிஅளித்த புகாரின் பேரில் காவல்ஆய்வாளர் சாகுல்ஹமீது வழக்குபதிந்து விசாரணை செய்து வருகின்றார் மேலும் ராமநாதபுரத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள்  வரவழைக்கப்பட்டு ஆய்வுசெய்தனர்  இந்த கோயிலில் தொடர்ச்சியாக நான்குமுறை உண்டியல்களை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments