அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பஸ் நிலையத்தில் தவெக மாவட்ட செயலாளர் சிவக்குமார் அறிவுறுத்தல்களின் படி உடையார்பாளையம் தவெக நகர செயலாளர் ரஜினி தலைமையில் தமிழக வெற்றி கழக கொள்கை தலைவர்களின் ஒருவரான வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு தினம் அனுசரிப்பு நடைபெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் எம் எல்.ராஜேஸ், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நகர இணை செயலாளர் வீராசாமி, நகர துணை செயலாளர் அரவிந்த், நகர பொருளாளர் கண்ணன், மற்றும் தவெக பொறுப்பாளர்கள் குமரேசன், வீரமணி,ராமு,விமல் ராஜ், மணிபாரதி, செல்வக்குமார் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு மற்றும் கிளைக் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் நகர பொருப்பாளர் விஜய் அனைவருக்கும் நன்றி கூறினார்.



0 Comments