மீஞ்சூர்,கொண்டக்கரையில் சாலை மறியல்...... பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு


திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அருகே உள்ள கொண்டக்கரை ஊராட்சிக்குட்பட்ட குருவி மேடு கிராமத்திற்கு செல்லும் சாலை கடந்த வடகிழக்கு பருவ மழையால் மிகவும் சேதமாகி உள்ள நிலையில் இந்த சாலை வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இங்குள்ள தேசிய அனல் மின் நிலையத்திற்கும் கண்டெய்னர் கம்பெனிகளுக்கும் சென்று வருகின்றன.இதனால் பல மணி நேரம் போக்குவரத்து தாமதம் ஏற்படுகிறது.

 சாம்பல்களை ஏற்றிக் கொண்டு வரும் லாரிகளின் கழிவுகளும் பல்வேறு கனரக பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களின் கழிவுகளும் சாலையில் நிறைந்து கிடப்பதால் கொண்டக்கரை பகுதியில் வசிக்கும் மக்கள் சாப்பிடும் சாப்பாடு கூட தூய்மையில்லாமல் நிறம் மாறி விடுவதாக குற்றம் சுமத்தி இந்த சாலையை உடனடியாக செய்து தர வேண்டும் என கூறி கொண்டக்கரை சிக்னல் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலும் கொண்டக்கரை குருவி மேடு சாலையிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இந்த பிரச்சினையை தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தக்க தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். சாலைமறியளை கைவிடக்கோரி மீஞ்சூர் காவல்துறை ஆய்வாளர் வேலுமணி,மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி,திமுக பிரமுகர் கொண்டகரை ஜெய்பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சமரசம் பேசியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

Post a Comment

0 Comments