கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை..... தெற்கு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் நேரடியாக சென்று எழுச்சி பயணத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு.....


திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டி சி மகேந்திரன் ஏற்பாட்டில் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள கவரப்பேட்டை, புதுவாயில், பெருவாயல் கீழ் முதலம்பேடு மேல் முதலம்பேடு தண்டலச்சேரி உள்ளிட்ட 20க்கும் ஊராட்சிக்கு நேரடியாக சென்று  வருகின்ற 30 ஆம் தேதி கும்மிடிப்பூண்டி தொகுதியில் நடைபெற உள்ள எடப்பாடி யாரின்  மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் புரட்சி பயணத்தில் ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி யாரின் புரட்சி பயணத்தில்  ஒவ்வொரு நிர்வாகிகளும் தங்களுடைய குடும்ப நிகழ்ச்சியாக கருதி குடும்பம் குடும்பமாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


 அப்போது திமுக விசிக உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான கே. எஸ். விஜயகுமார்  கழகத் துண்டை அணிவித்து கழகத்தில் இணைத்துக் கொண்டார். இதில் ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.எம்.ஸ்ரீதர், பல்லவாடா  ரமேஷ்குமார், நகர செயலாளர் எஸ் டி.டி. ரவி, மாவட்ட பிற அணி செயலாளர்கள் இமயம் மனோஜ், இரா.சேதுபதி, உமாபதி, எல்லப்பன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சரவணன், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் தீபா மணிகண்டன்,ஒன்றிய நிர்வாகிகள் மு.க.சாகர்,ஒடை ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் வெங்கட கிருஷ்ணன், ஜேஜே பில்டர்ஸ். தினமலர் சீனிவாசன். சீதா தேவராஜ் செங்கையா டில்லி பாபு ஆறுமுகம்.பெருவாயில் ஜெயராமன், சுதாகர். விஜயகாந்த் ரஜினி தீபக் சூர்யா மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ராஜா, ஆத்துப்பாக்கம் தீனதயாளன்,உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் முன்னதாக புரட்சித் தமிழருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.





Post a Comment

0 Comments