திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரியில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் G. S.வினோத் தலைமை வகிக்க உபயதுல்லா, மற்றும் அம்மா பேரவை செயலாளர் V. திருமலை ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் P. பலராமன் Ex MLA மற்றும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன் ராஜா Ex MLA ஆகியோர் பொன்னேரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மக்கள் திலகம்,பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் 500க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவையுடன் அன்னதானம் வழங்கினர்.
இதில் வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனன், சலீம்,இளையராஜா, ஆறுமுகம், தியாகராஜன், அண்ணாதுரை,E.தேவன் R.தேவன் மற்றும் அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் K. A. நாகராஜன்,விவசாய அணி ஒன்றிய செயலாளர் N. ஆறுமுகம்,மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் M.மாதவி நகர மகளிரணி செயலாளர் மற்றும் 13வது வார்டு கவுன்சிலர் V.மணி மேகலை,நகர இணைச் செயலாளர் வாசுகி (எ) வசந்தா மற்றும் மாவட்ட,ஒன்றிய,நகர,பேரூர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பிற அணிகளின் நிர்வாகிகள், கழக ரத்தத்தின் ரத்தங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




0 Comments