பெரியகுளம் அருகே ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் இளைஞர் பாராளுமன்றம் நிகழ்ச்சி

 


தேனி மாவட்டம், பெரியகுளம் ஜெயராஜ் அன்னமாக்கிய மகளிர் தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் , இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இணைந்து விக்சித் பாரத் யூத் பார்லிமென்ட்  - 2026 க்கான பேச்சுப்போட்டியானது அவசர நிலையின் 50 ஆண்டுகள் இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த பாடங்கள் எனும் தலைப்பில் இறைவழிபாட்டுடன் குத்து விளக்கேற்றி தொடங்கப்பட்டது. நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜானி டதீஸ்  வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.

 ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி முதல்வர் அருட் சகோதரி முனைவர் S.இருதய கலைச்செல்வம், கல்லூரி செயலர் அருட் சகோதரி முனைவர் R. சாந்தாமேரி ஜோஷிற்றா வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினரான உயர்திரு L.ஞானசந்திரன் M.E District Youth Officer, Mera yuva Bharat, Theni  தலைமை உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து,   மாணவர்களின் பேச்சுப்போட்டியானது தொடங்கப்பட்டது. இப் போட்டியின் நடுவர்களாக L. ஞானசந்திரன், முனைவர் R.பரிமளா தேவி நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் கொடைக்கானல்,  முனைவர் S.காந்திமதி அரசியல் அறிவியல் உதவிப் பேராசிரியர் , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடுமலைப்பேட்டை அவர்களும்  முனைவர் R. மனோகரன் கல்வி தோட்டக்கலை அலுவலர் மற்றும் எழுத்தாளர் தேனி அவர்களும் திரு M.தேவராஜ் வார்டு கவுன்சிலர் தென்கரை பெரியகுளம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இப் போட்டியில் 14 கல்லூரிகளில் இருந்து 100 மாணவிகள் கலந்து கொண்டு அவசர நிலையின் 50 ஆண்டுகள் இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த பாடங்கள் எனும் தலைப்பில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினரான பணி நிறைவு பெற்ற தோட்டக்கலை அலுவலர் மற்றும் எழுத்தாளர் தேனி முனைவர் R. மனோகரன் அவர்கள் தொகுப்புரை வழங்கினார். தேனி மாவட்ட அளவில் நடந்த இப்போட்டியின் முடிவில், 10 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றவர்களாயினர். தகுதி பெற்ற மாணவிகளுக்கு கேடயமும் சான்றிதழும் வழங்கப்பட்டன. மேலும் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முனைவர் R.பரிமளா தேவி  நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் கொடைக்கானல் அவர்கள் நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் விழாவானது இனிதே நிறைவுற்றது.

Post a Comment

0 Comments