நெல்லையில் பொருநை ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட அகழ்வாய்வு பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக தொல்லியல் துறை சார்பில் ரூ 56.36 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பொருநை அருங்காட்சியத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்கள்.நாளை மறுநாள் 23.12.2025 செவ்வாய் கிழமை முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொருநை அருங்காட்சியினை பொதுமக்கள் எளிதாக சென்று பார்த்துச் செல்வதற்கு வசதியாக திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் மற்றும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்கள்.


0 Comments