அரியலூர் மாவட்ட தலைமை இசை வேளாளர் சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது


அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் நகரில் மாவட்ட தலைமை இசை வேளாளர் சங்கம் நடத்தும்,முதலாம் ஆண்டு முப்பெரும் விழா (முதலாம் ஆண்டு விழா,தமிழ்நாடு அரசின் சிறந்த கலைஞர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா,விருது வழங்கும் விழா) நடைபெற்றது.விழாவிற்கு அரியலூர் மாவட்ட தலைமை இசை வேளாளர் சங்க மாநில கௌரவ தலைவர் V.P.S.சக்தி செல்லதுரை  தலைமை வகித்தார்.மாநில துணை செயலாளர் உடையார்பாளையம் வெ.செந்தில் வரவேற்புரை நிகழ்த்தினார்.ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இசை கலைஞர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி பாராட்டி,சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் மாநில தலைமை இசை வேளாளர் சங்க  தலைவர் வழக்கறிஞர் வழுவூர் ரவிதேவா, பூபாலன் , கணேசன், உடையார்பாளையம் பேரூர் கழக செயலாளர் ப.கோபாலகிருஷ்ணன், உடையார்பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் மலர் விழி ரஞ்சித் குமார்,மற்றும் பல்வேறு இசைக் கலைஞர்கள், திமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.முடிவில் கங்கை கொண்ட சோழபுரம் நாகஸ்வரம் மணிகண்டன் அனைவருக்கும் நன்றி கூறினார்.



Post a Comment

0 Comments