சிவகங்கை: நெற்குப்பை பேரூராட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்




சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற துணைச் சேர்மன் கண்ணன் ஏற்பாட்டில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம் தலைமையில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து அறுசுவையுடன் கூடிய அசைவ விருந்து சுமார் 1000 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

 முன்னதாக கழக முன்னோடிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் முத்து,பொருளாளர் ராமன், தருப்பத்தூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திருநாவுக்கரசு நெற்குப்பை நகர இளைஞரணி துணை அமைப்பாளர் அடைக்கப்பண், விஜய், மாவட்ட பிரதிநிதி நடராஜன்,தகவல் தொழில்நுட்ப அணி முருகேசன்,சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பாபு, கவுன்சிலர்கள் சின்னையா,கணேசன், வார்டுச்செயலாளர் ராஜேந்திரன், பாலமுருகன், கழக மூத்த முன்னோடிகள் ராசு,சேகப்பன்,பத்தம்பலம்,போஸ் சேவுகன், சிங்காரம்,நாகராஜ்,நாகு, கொமடி, சேவுகன்,சடையன்,பாதர்வெள்ளை,செல்வராஜ், உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பிரபு, தவசு ராமன், அன்பரசு,மணிகண்டன்,ஜீவா மற்றும் பேரூர் நகர் கழக கிளைக் கழக சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments