சிவகங்கை மாவட்ட காரைக்குடி சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமையில் தேவகோட்டையில் உள்ள சரவணா மஹாலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிவி டிவி வி தினகரன், தேவகோட்டை பகுதி என்பது எனக்கு நன்கு அறிந்த பகுதியாகும், கல்வி பயின்ற காலங்களில் இருசக்கர வாகனங்களில் சுற்றி சென்ற பகுதியாகும், 40 ஆண்டு காலங்களுக்கு முன்பே நன்கு அறிந்த பகுதியாகும், இன்று டிசம்பர் 21, பிப்ரவரி மாத இறுதியில், அல்லது மார்ச் மாத முதல் பகுதியிலேயே சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும், ஊடகங்களில் எதை சொன்னேனோ அதைத்தான் உங்கள் முன்பாகவும் சொல்ல வருகிறேன், தமிழகத்தைப் பொறுத்தவரை நான்கு முனை போட்டிதான் இருக்கும், சகோதரர் சீமான் தனித்து தான் போட்டி என அறிவித்திருக்கிறார், அதுபோன்று தேசிய ஜனநாயக கூட்டணி, ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, விஜய் தலைமையிலான கூட்டணி நிச்சயமாக அமையும்.


0 Comments