திருவள்ளூர் மண்டலத்தில் சாலை பாதுகாப்பு பேட்ஜ் அணித்து பணிசெய்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள்

 


சாலை பாதுகாப்புக்கான விழிப்புணர்வு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மத்தியில் ஏற்படும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட்., திருவள்ளூர் மண்டலம் சார்பாக  மேலான் இயக்குனர் திரு. குணசேகரன் மற்றும் திருவள்ளூர் மண்டல பொது மேலாளர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க 15.12.2025 திங்கட்கிழமை முதல் 31.12.2025 புதன்கிழமை வரை சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் திருவள்ளுவரும் மண்டலத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் நிகழ்ச்சிகள் தினம் தோறும் நடைபெறும்.

 இதில் சாலை விபத்துகள் ஏற்படாமல் இருக்க ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மத்தியில் ஏற்பட வேண்டிய விழிப்புணர்வு மற்றும் சாலை விதியை பின்பற்றுதல் வாகனம் இயக்கும்போது கவன சிதறல் ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய கருத்துக்கள், நடவடிக்கைகள் குறித்து அனைத்து ஓட்டுனர்களுக்கும் நடத்துனர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மண்டலத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் (பாதுகாப்பான பேருந்து இயக்கம் 15.12.2025 முதல் 31.12.2025) என்ற பேட்ஜ் அணிந்து பணி செய்யும் வகையில் அதிகாலை முதல் திருவள்ளூர் மண்டல பொது மேலாளர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் மூலமாக நடைபெற்றது இந்நிகழ்ச்சி திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி மற்றும் கோயம்பேடு பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் நடைபெற்றது இதில் கிளை மேலாளர்கள் உதவி பொறியாளர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்று கொண்டனர்.



Post a Comment

0 Comments