ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கோட்டைபட்டியில் புதிய ரேஷன் கடை அமைத்து தர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததன் பேரில், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. திமுக மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் இவ்விழாவிற்கு தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
ஒன்றிய துணைச் செயலாளர் தங்கபாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுலைமான், கூட்டுறவு சார்பதிவாளர் வேல்முருகன், கிராமத் தலைவர் சுப்பிரமணியன்,ஊராட்சி செயலர் குருசாமி மற்றும் கிராம பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


0 Comments