பசும்பொன் மார்னிங் ஸ்டார் கலைக்கல்லூரியில் மும்மதத்தினர் இணைந்து கிறிஸ்துமஸ் திருவிழா கொண்டாடினர்


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் பகுதியில் உள்ள மார்னிங் ஸ்டார் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் கிறிஸ்மஸ் திருவிழா கொண்டாடப் பட்டது. கல்லூரி வளாகத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு,மாணவிகள் அனைவருக்கும் கேக் வழங்கி கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் அமலி வரவேற்று பேசினார். கல்லூரி வளாகசெயலர் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். 

விழாவில் இந்து, முஸ்லீம்,கிறிஸ்துவர் ஒற்றுமையை பறைசாட்டும் விதத்தில்,மதசார்பு இல்லாமல் மூன்று மதத்தைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். கமுதி புனித அந்தோனியார் ஆலய பங்குதந்தை அம்புரோஸ் லூயிஸ், செய்தி மக்கள் தொடர்புத்துறை துணை இயக்குனர் தங்கவேல்,அபிராமம் வின்.என்.எஸ் கல்வி டிரஸ்ட் செயலாளர் ரஹ்மான் அப்துல் கனி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர். விழாவில் கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் கிறிஸ்து பிறப்பு குறித்து தத்ரூபமான நாடகம் நடைபெற்றது. விழாவில் கல்லூரியின் ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments