திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,சோழவரம் வடக்கு ஒன்றியம்,பெருஞ்சேரி கிராமத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி எனும் தலைப்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நான்கரையாண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வழுதிகை நா.செல்வசேகரனா தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சாதிக்பாட்சா கலந்து கொண்டு நான்கரை ஆண்டு திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு விளக்கி கூறினார். தெருமுனை கூட்டம் முடிந்த பின் வீடு வீடாக சென்று என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி மற்றும் தமிழ்நாடு தலைகுனியாது எனும் பிரச்சாரத்தை ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் தொண்டர்களுடன் சேர்ந்து மேற்கொண்டார்.
இந்த தெருமுனை கூட்டத்தில் மாவட்ட,ஒன்றிய,கிளை கழக,பாக முகவர்கள் இரண்டு உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.


0 Comments