தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட இணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுந்தரராஜன், சேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் பிச்சை, தணிக்கையாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் துரைராஜ் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பிரகாஷ் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
கனகராஜன் முன்னாள் மாவட்ட துணை தலைவர் இப்ராகிம் முன்னாள் மாவட்ட தலைவர் கதிரேசன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் தாமோதரன், TNEGA மாவட்டச் செயலாளர் முத்துக்குமார், TNGPA மாவட்டச் செயலாளர் சிவமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் சுருளியாண்டி, TNGPA மாநில துணைத் தலைவர் ராமமூர்த்தி நிறைவுரையாற்றினார். TNRDPA மாவட்ட பொருளாளர் முத்துராஜ் நன்றியுரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறை முற்றிலும் கைவிடப்பட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளநிலை பொறியாளர்களுக்கு உதவி பொறியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதம் அனுமதித்து ஆணையிடல் வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ்நாடு ஊர வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

0 Comments