சிவகங்கை: பேருந்து நிறுத்தம் கட்ட எதிர்ப்பு வலுத்த நிலையில்,நில அளவீடு செய்த வருவாய் துறை


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்டது புதுவயல் பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட சாக்கோட்டை பகுதியில் அருள்மிகு சாக்கை உயர்தம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது, இக்கோவிலுக்கு பக்தர்கள் நிறைந்து வந்து செல்வார்கள், இதன் அருகில் அரசுக்கு சொந்தமான உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது, இந்தப் பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வெயில் மற்றும் மழை காலங்களில் அவதிக்குள்ளாகி வருவதை அறிந்த பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் பேருந்து நிறுத்தம் கட்ட முயன்றது, இதற்கு நிதியும் ஒதுக்கப்பட்ட நிலையில் பேருந்து நிறுத்தம் கட்ட இடம் தேர்வு செய்யும் முயற்சியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.

 கோவிலின் பகுதியில் இடம் இல்லாததாலும், திருவிழா காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள், போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுவதுடன், விபத்தும் ஏற்பட்டு வருவதை உணர்ந்த பேரூராட்சி நிர்வாகம் கோவிலின் மேற்கு புறத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிறுத்தம் கட்டுவதற்கு முயன்றனர். இதற்கு அப்பகுதியில் வணிக நிறுவனம் நடத்தும் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சில நாட்கள் கிடப்பில் போடப்பட்டது, வருவாய்த் துறையின் சீறிய முயற்சியால் இன்று நில அளவீடு கொண்டு அளவீடு செய்து அரசு தான் ஆன இடத்தை அடையாள காண்பிக்கப்பட்டது, இதை அறிந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள், காரைக்குடி வட்டாட்சியர், சாக்கோட்டை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட நிர்வாகத்தினருக்கு நன்றி தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.

Post a Comment

0 Comments