அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் பணிப் புரியும் தூய்மை பணியாளர்கள் 27 பேருக்கு இயேசு கிறிஸ்துவின் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு உடையார்பாளையம் ஏ.ஜி சபை சார்பாக இலவச வேட்டி சேலை வழங்கும் விழா நடைபெற்றது.விழாவிற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் மலர்விழி ரஞ்சித் குமார் தலைமை வகித்தார்.உடையார்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி அலுவலகத்தில் பணி புரியும் அனைத்து பணியாளர்களுக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை ஏ.ஜி சபை மாஸ்டர் வெற்றிக்குமார், அவரது துணைவியார் ஜெயசீலி மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.

0 Comments