ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வங்கிகளில் கடந்த சில நாட்களாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக நகை கடன் தொடர்பான பணிகளுக்காக வங்கிகளுக்கு வருகை தரும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிக அளவில்உயர்ந்துள்ளது.இதற்கு காரணம் வரவிருக்கும் தேர்தல் காலத்தை முன்னிட்டு நகை கடனுக்கு தள்ளுபடி அல்லது சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக, தங்களிடம் உள்ள தங்க நகைகளை அதிக அளவில் வங்கிகளில் கூட்டுறவு சங்கங்களில் அடகு வைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் கூடுதல் கூட்டம் நிலவி வருகிறது.இதன் எதிரொலியாக வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், மக்கள் வருகை அதிகரித்ததால் தினசரி பணிகள் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது என கூறுகின்றனர். பொதுமக்கள் தரப்பில் தேர்தல் நேரத்தில் அரசு நகை கடனுக்கு தள்ளுபடி வழங்கும் வாய்ப்பு இருப்பதால் முன்கூட்டியே நகைகளை வங்கியில் வைத்துவருகிறோம் எனகூறுகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால், வரும் நாட்களிலும் சாயல்குடி பெருநாளி கமுதி முதுகுளத்தூர் பகுதியில் உள்ள வங்கிகளில் மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது டிசம்பர் வரை வைக்கப்படும் நகைகடன்களும் சுசைட்டிகளில் வாங்கியுள்ள பயிர்கடன் விவசாயகடன்களை ரத்து அல்லது வட்டி ரத்து என அறிவிப்பு வரும் என விவசாயபொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

0 Comments