ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முன்னாள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.கமுதி -பேருந்து நிலையம் முன்பு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
தேமுதிக மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா வழிகாட்டுதலின் படி, ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், வேல்மயில் முருகன் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, நகரச்செயலாளர் செந்தில்வேல் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகன், வழக்கறிஞர் சேதுபதி,பொதுக்குழு உறுப்பினர் ராமசாமிபட்டி முருகேசன் உட்பட தேமுதிக கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


0 Comments