சிவகங்கை: மண்ணை இயற்கை மண்ணாக மாற்ற போராடிய விவசாயி...... அரசு அங்கீகாரம் கிடைக்குமா? ஏங்கும் இயற்கை விவசாயி

 


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்டது சிறுகபட்டி ஊராட்சி, இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா இவரது மகன் செல்லையா, இவர் தனது தகப்பனாரின் பெயரில் உள்ள சுமார் ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தை, இயற்கை விவசாயி ஐயா நம்மாழ்வார் அவர்களின் செய்திகளை கண்டறிந்து இயற்கையாக விவசாயம் செய்ய முயன்றுள்ளார், அது பொய்ய்க்கவே அருகில் இருக்கும் விவசாயிகள் நையாண்டி செய்து சிரித்துள்ளனர், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார், ஒரு கட்டத்திற்கு மேல் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்ட நிலையில், தனது வீட்டில் இருந்த நகைகளை அடமானம் வைத்து மண்ணில் இருந்த செயற்கை உரங்களை, அப்புறப்படுத்த முயன்றுள்ளார், இதை அறிந்த இவரின் தகப்பனார் கருப்பையா பணத்தை எல்லாம் இன் விரயம் செய்கிறாய் என்று கோபமாக பேசி வீட்டை விட்டு வெளியேறியும்ள்ளார்.

 ஆனால் செல்லையாவோ இயற்கை விவசாயத்தில் கொண்ட அக்கறை குறையவில்லை கூடுதலாக சென்றது, அதன் அடையாளமாக தான் இன்று அவர் செய்திருக்கிற நெற்பயிர்கள் மற்றும் காய்கறிகள் நிற்கிறது, 5 அடி உயரத்திற்கு மேலாக நெல்மணிகளோடு வளர்ந்து நிற்கும் கதிர்களை கண்டு நாமும் வியந்தோம், இவரது வியப்பை கண்டு வெளியில் சென்ற தகப்பனார் வீட்டிற்கு வந்தார், செல்லையாவோடு கைகோர்த்தார் கருப்பையா, ஐந்தாண்டுகளுக்கு மேல் போராடி இயற்கை கொடுத்த வரமாய் காட்சியளிக்கிறது அவரது விவசாயம், அவர் நம்மிடம் கோரிக்கை வைக்கும் போது சாக்கோட்டை விவசாய மையத்திடம் தங்களுக்கான அங்கீகாரத்தை தாருங்கள் என பலமுறை கேட்டோம், ஆனால் அவர்கள் எங்களை அலைக்கழிப்பு செய்ததோடு விட்டுச் சென்று விட்டனர், உங்கள் பத்திரிகையின் வாயிலாக அரசிடமிருந்து எங்களுக்கு ஒரு அங்கீகாரத்தை வாங்கி தாருங்கள் என கோரிக்கை விடுத்தனர், இன்று தமிழகத்தில் விலை நிலங்கள் வீட்டில் நிலமாக மாறிவரும் நிலையில், விவசாயத்தை தன் உயிராக செய்யும் இவர்களைப் போன்ற விவசாயிகளை அரசு கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பது நமது கோரிக்கை என்பதும், அரசு வழங்கும் அங்கீகாரத்தையும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

Post a Comment

0 Comments