தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 வயது நிரம்பிய சிறுமி மஞ்சள் காமாலை நோயோடு மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு MRI- MRCP SCAN எடுக்கப்பட்டது. கணைய வீக்கம் மற்றும் பித்த பாதையில் கல் மற்றும் கணைய பிரச்சனை ஏற்படுவது அரிது அதை சரி செய்ய இதுவரை சென்னை அரசு மருத்துவமனைக்கே குழந்தைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
நமது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் சிவகுமார் மருத்துவத் கண்காணிப்பாளர் பத்மநாபன் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் வழிகாட்டுதலின்படி குடல் மற்றும் இரைப்பை மருத்துவ பிரிவில் உள்ள மருத்துவர்கள் செல்வசேகரன் மற்றும் சாய்ராமன் மருத்துவர் விக்னேஷ்வரன் ஆகியோர் சிறந்த முறையில் பித்தப் பாதையில் அடைத்திருந்த கல் மற்றும் கசடு அடப்பை ERCP என்ற எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் நீக்கி புத்த பாதையில் வடிகுழாய்யை ( CBD. STENT ) வெற்றிகரமாக குழந்தைகள் மருத்துவப் பிரிவு துறை தலைவர் அருணாசலம் மயக்கவியல் மருத்துவர் பலராமன் மற்றும் விஜயராகவன் உதவியுடன் வைத்தனர் இன்று குழந்தை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்வதால் சுகமான குழந்தை மருத்துவர் முன்னிலையில் கேக் வெட்டி அனைவருக்கும் கேக் கொடுத்து நன்றி தெவித்தது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது தொடர்ந்து மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் கூறினர்.

0 Comments