தேனியில் ஆட்சி மொழிச் சட்ட வார விழா நடைபெற்றது

            


தேனி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் ‘ஆட்சிமொழிச் சட்ட வார விழா’வின் ஒரு பகுதியாக,  வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளைத் தமிழில் அமைக்க வலியுறுத்தியும், எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று பொதுமக்கள் தமிழ் மொழியைப் பயன்படுத்த வேண்டியும் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

 இப்பேரணியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பாப்பாலட்சுமி, தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பொன்முடி, செயலாளர் எழுத்தாளர் தேனி மு. சுப்பிரமணி, புலவர் இளங்குமரன், கம்பம் பாரதன், தேனி சீருடையான், காமுத்துரை, அல்லி உதயன், வி.பி.மணிகண்டன் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இப்பேரணியில் சிலம்பம், புலியாட்டம் நடைபெற்றது.

Post a Comment

0 Comments