ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பெருநாழி இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் "நலம் காக்கும் ஸ்டாலின் " முகாம்நேற்று நடைபெற்றது. இம்முகாமிற்கு தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன்,மருத்துவ அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் பெருநாழிபோஸ்,ஒன்றிய செயலாளர்கள் சண்முகநாதன் ,ஜெயபால், குலாம், பூபதிமணி, வட்டார காங்கிரஸ் தலைவர் பழக்கடை ஆதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாமில் ஆண்கள், பெண்கள் குழந்தைகளுக்கான பொது மருத்துவம், ரத்தப் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, கர்ப்பபைவாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை, குழந்தைகள் நல மருத்துவம், இதயம் மற்றும் நரம்பியல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம், சித்த மருத்துவம், காசநோய் மற்றும் தோல்நோய் மருத்துவம், போன்ற மருத்துவம் நடைபெற்றன. இதில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

0 Comments