தேனி அல்லிநகரம், பெரியகுளம் நகராட்சிகளில் தூய்மை பணியாளர் களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா

 


 தேனி- அல்லிநகரம் நகராட்சி,பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் மற்றும் தாட்கோ சார்பில் அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழாவில்,தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் டாக்டர்.திப்பம்பட்டி.வெ.ஆறுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தூய்மை பணியாளர் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை  வழங்கினார்.

இந்த நிகழ்வில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், தேனி-அல்லிநகரம் நகராட்சி நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியாபாலமுருகன்,பெரியகுளம் நகர் மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார்,பெரியகுளம் நகர் கழக செயலாளர் முகமது இலியாஸ்,தேனி வடக்கு நகர் கழக பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன், நகர்மன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும்  பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments