சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது இளங்குடி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 2020 ஆம் ஆண்டு முதல் 25 ஆம் ஆண்டு வரை ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் ஜோசப், இவர் பதவி வகித்த காலங்களில் ஊராட்சி செயலாளராக சண்முகம் வள்ளி என்பவரும் பணியாற்றி வந்துள்ளனர்.இவர்களது பணிக்காலங்களில் 32 வகையான நிர்வாக கோப்புக்களை, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு செய்யவில்லை என்றும், இதனால் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில்,பத்து ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு செய்ததாக கூறப்படுகிறது, பின்னர் நீதிமன்றத்தை நாடி சண்முகவள்ளி என்பவர் பணி நியமனம் பெற்று வேறொரு ஊராட்சியில் செயலராக பணியாற்றி வருவதாகவும் தெரிகிறது.
இதை அறிந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததாக கூறப்படும் நிலையில், இவர்களின் போராட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் இணைந்து முற்றுக போராட்டத்தை முன்னெடுத்தனர், இதில் 2020 முதல் 25 ஆம் ஆண்டு வரை கடந்த ஐந்தாண்டு காலமாக நடந்த முறைகேடுகளை மறைப்பதற்காக 28 ஆவணங்களை அழித்தொழித்தவர்கள் மீது ஓர் ஆண்டு காலம் ஆகியும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், உதவி இயக்குனர் ஊராட்சி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர்களை கண்டித்தும், 2023 -24 நிதி ஆண்டில் மட்டும் விதி மீறல்களுடன் நிதி இழப்பு ரூபாய் 8 ,27,897யை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜோசப், செயலாளர் சண்முகவள்ளி ஆகியோர்களிடமிருந்து பறிமுதல் செய்து அரசு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், பெண்களை இழிவு படுத்துவதாக ஆவாரம் இல்லாத பொய் புகார்களை அனுப்பி கிராம ஒற்றுமையை சீர்குலைக்கும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இளங்குடி குரூப் கருங்குடி கிராமத்தில் சர்வே எண் 180ல் மயானத்தில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர், இதுகுறித்து கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம் அவர்கள் கூறும் போது, முறைகேடு நடந்திருப்பது உண்மை என்று தெரிய வருகிறது, மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி ஒரு குழு அமைத்து ஒரு மாத காலத்தில் உண்மை நிலையை கண்டறிந்து, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கல்லல் காவல் நிலைய ஆய்வாளர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர் இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சாத்தையா, சண்முகசுந்தரம்,நாம் தமிழர் கட்சி மாறன், மற்றும் ஊராட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


0 Comments