அதிமுக சார்பில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் போட்டியிட திருவள்ளூர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், ஜெ.என்.என் (JNN) கல்விக் குழுமத்தின் தலைவருமான S. ஜெயச்சந்திரன் விருப்ப மனு அளித்தார்


அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், ஜெ.என்.என் (JNN) கல்விக் குழுமத்தின் தலைவருமான S. ஜெயச்சந்திரன், B.Sc., B.L., அவர்கள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் தேர்தல் நடைமுறைகளின் ஒரு பகுதியாக, தமது விருப்ப மனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார். நீண்ட காலமாக கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், சட்டத் துறையிலும் கல்வித் துறையிலும் குறிப்பிடத்தக்க சேவைகளை வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்வின் போது, திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு, S.ஜெயச்சந்திரனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

விருப்ப மனு தாக்கல் செய்யும் நிகழ்வில்,வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் D. கார்த்திக்,V. திருமலை,N.S. பழனி ராஜ்,பெரியபாளையம் சுரேஷ், சுரேஷ் பாபு,K. லோகநாதன்,G. நந்தகோபால், K. கோதண்டன்,பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

கும்மிடிப்பூண்டி தொகுதியின் வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்களை திறம்பட முன்னெடுப்பது, இளைஞர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாடு ஆகியவற்றை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படுவேன் என S.ஜெயச்சந்திரன் தெரிவித்தார். 

மேலும், அதிமுக தலைமையின் வழிகாட்டுதலின்படி கட்சியின் கொள்கைகள் மற்றும் மக்கள் சேவையை முன்னெடுத்து செல்ல உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இந்த நிகழ்வு, திருவள்ளூர் மாவட்ட அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Post a Comment

0 Comments