வருடத்தின் முதல் நாளான நேற்று, அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்துள்ளன. சென்னையில் எழும்பூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 46.
சேலத்தில் 29 குழந்தைகள் விழுப்புரம் மாவட்டத்தில் 27 குழந்தைகள், நெல்லையில் 24 குழந்தைகளும் பிறந்துள்ளன. தஞ்சை, மதுரை, திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா 22 குழந்தைகள், செங்கல்பட்டு, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் தலா 20 குழந்தைகளும் நேற்று மாலை வரை பிறந்துள்ளன.
மயிலாடுதுறையில் 16 மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 15 குழந்தைகளும், கடலூர், திருப்பூர், தேனி, திருச்சி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தலா 13 குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் 14, திருப்பத்தூர், ஈரோடு, தூத்துக்குடியில் தலா 12 குழந்தைகள், கோவையில் 11, நாமக்கல் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் தலா 10 குழந்தைகளும் பிறந்துள்ளன.
காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா 8 குழந்தைகள், சிவகங்கை மாவட்டத்தில் 7 குழந்தைகளும் பிறந்ததாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. நீலகிரி, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், விருதுநகர், ராமநாதபுரம், குமரி ஆகிய மாவட்டங்களில் தலா 6 குழந்தைகளும் பிறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் 4 குழந்தைகள், அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா 3 குழந்தைகளும் பிறந்துள்ளன.

0 Comments