மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளையொட்டி கும்மிடிப்பூண்டி பஜாரில் கும்மிடிப்பூண்டி பேரூர் கழக செயலாளர் எஸ் டி டி ரவி ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் தெற்கு. ஒன்றிய செயலாளர்கள் டி.சி.மகேந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர்சுண்ணாம்புகுளம் எஸ்.எம். ஸ்ரீதர். மேற்கு.ஒன்றிய செயலாளர்.பல்லவாடா ரமேஷ்குமார்.நிர்வாகிகள் எஸ்.டி.டி.ரவி, சேதுபதி, இமயம் மனோஜ், எம்.எஸ்.எஸ். சரவணன், டேவிட் சுதாகர்,ஓ.எம். கிருஷ்ணன், புது கும்மிடிப்பூண்டி சுகுமாரன், மு.க.சேகர், எம்.ஏ.மோகன், மீனவ அணி நிர்வாகி மாவட்ட துணை செயலாளர் ஆரம்பாக்கம் சுரேஷ், ஓபுளாபுரம் ஏழுமலை குருமூர்த்தி.பங்கேற்றனர்.
புது கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை..ஏளாவூர்.ஆரம்பாக்க பல்லவாடா..பாட்டைகுப்பத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க சார்பில் அன்னதானம் இனிப்பு.வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி பேரூர் கழக நிர்வாகிகள்.கிழக்கு மேற்கு தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




0 Comments