திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் சிறுணியம் P. பலராமன் அறிவுறுத்தலின் பேரில், ஆரணி நகரச் செயலாளர் A.M. தயாளன் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் நகர அவைத் தலைவர் B. V.சீனிவாசன், . K.N.சீனிவாசன், அம்மா பேரவை,துணைச் செயலாளர்கள், M.காந்தம்மா, B. துளசி, இணைச் செயலாளர் . G.தன்ராஜ், மற்றும் பொருளாளர் மா. சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆரணி பேரூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர அளவிலான ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
A.M.D. யுவராஜ் (மாவட்ட மாணவரணி), R.பாலகிருஷ்ணன் (பிரதிநிதி),சம்பந்தன், டீக்கடை ஆறுமுகம் (எம்.ஜி.ஆர் மன்றம்), A. ஏசுதாஸ் (இலக்கிய அணி), . K.குமரேசன் (ஓட்டுநர் அணி), A.காலேஷா (சிறுபான்மை பிரிவு), . E.சீனு, M.G. விஜயன் (இளைஞர் அணி), . L.மஞ்சுளா (மகளிர் அணி).N. R.புருஷோத்தமன், . M.பாலகிருஷ்ணன், V.முரளி, A.C. வெங்கடேசன், T.சுகுமார், P. சாஸ்திரி, . K.விஸ்வநாதன், P.நாகப்பன், மோகன், M.அசோக், B. பாலாஜி, C.ராஜா, B. துளசிராம் ஆச்சாரி மேலும், பேரூர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.





0 Comments