திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கவரப்பேட்டை, பாதிரிவேடு, ஏ.என்கண்டிகை ஆகிய பகுதிகளில் அரசினர் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 4000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மேற்கண்ட பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் கவரப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கவரப்பேட்டை தலைமையாசிரியர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு மாணவர்களிடம் பேசும்போது தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது எனவும், இதனை மாணவர்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் பல சாதனைகளை புரிய வேண்டும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் 861 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியப் பெருமக்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



0 Comments