பரமக்குடியில் கட்டப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் மணிமண்டபம் முதல்வர் மு.க.ஸ்டாலின் 17ந்தேதி திறந்து வைக்கிறார்


பரமக்குடியில் ரூ3 .கோடியில் கட்டப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் மணிமண்டபத்தை வருகிற 17 ந்தேதி முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து திறந்துவைக்கிறார்                   ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சந்தைக்கடை திடலில் தமிழகஅரசு சார்பில் ரூ.3கோடி மதிப்பீட்டில் தியாகி இம்மானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது   அனைத்துபணிகளும் முடிவடைந்து திறப்புவிழாவுக்கு மணிமண்டபம் தயார் நிலையில் உள்ளது இதனை வருகின்ற 17 ந்தேதி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்துவைக்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.பி, எம்.எல்.ஏக்கள். அரசுஅதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.  முதல்வர் வருகைக்கான ஏற்பாடுகளை  அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்  ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பரமக்குடி எம்.எல்.ஏ.முருகேசன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்

Post a Comment

0 Comments