ராமநாதபுரம்: கீழராமநதிபகுதியில் மழையின்றி 2000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் கருகி வீணாகின விவசாயிகள் வேதனை


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழராமநதி,தலைவநாயக்கன்பட்டி,புளிச்சிகுளம் ஆகிய பகுதிகளில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கரில்நெல் விவசாயம் செய்தனர். இந்நிலையில் பருவமழை இந்தவருடம் சரிவர பெய்யாததால்மழையின்றி நெற்பயிர்கள் கருகி வீணாகின. விவசாயத்தை மட்டும் நம்பி வாழும் இப்பகுதி விவசாயிகள், கடன் வாங்கி விவசாயம் செய்தோம் என்றும் தற்போது, பயிர்கள் வீணாகிப் போனதால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து உள்ளோம் என்று மிகவும் வருத்தத்துடன் இப்பகுதி விவசாயிகள் கூறினர். எனவே அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று இப் பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments