பிள்ளையார்பட்டியில் 2026 ம் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு..... தங்க கவசத்தில் எழுந்தருளிய அருள்மிகு கற்பக விநாயகர்......

 


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உலக பிரசித்தி பெற்ற குடவறை கோவிலாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 2026 ம் ஆண்டின் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை 3.30 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்பட்டு பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேக்கங்கள் நடைபெற்று 4:30 மணிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். 

மூலவர் கற்பக விநாயகர் தங்க கவசத்திலும், உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டின் முதல் நாளில் இந்துக்களின் முழு முதற் கடவுளாக போற்றப் படுகின்ற விநாயக பெருமானை தரிசனம் செய்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் அருள்மிகு கற்பக விநாயகர் தரிசிக்க தமிழகம் முழுவதும் மட்டுமன்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் வந்திருக்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், என பல்லாயிரக் கணக்கானோர் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் நின்று  தரிசனம் செய்து வருகின்றனர். நேரம் ஆக ஆக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வர துவங்கியுள்ளனர்.


பக்தர்களின் கூட்டம் அதிகாமாக உள்ளதால் அவர்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவாரசாத்  தலைமையில்  700 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் 70 cctv கேமாராக்களை பொருத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக மருத்துவம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தின் சார்பாக செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் போக்குவரத்து துறை சார்பாக  பல்வேறு பகுதிகளில் இருந்து பிள்ளையார்பட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments