தேனி: பெரியகுளம் அருகே திராவிடப் பொங்கல் 2026 -சைக்கிள் போட்டி

  


தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டியில் ‘திராவிட பொங்கல் - 2026’ விழாவினை முன்னிட்டு, "சமத்துவம் பொங்கட்டும் - தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற உன்னத நோக்கத்துடன் மாபெரும் சைக்கிள் போட்டி நடைபெற்றது.

வடுகபட்டி யூனியன் அலுவலக சாலைப் பகுதியில் நடைபெற்ற இந்தப் போட்டியினை, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரும், பெரியகுளம் தெற்கு ஒன்றிய செயலாளருமான கே.எஸ்.சரவணக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன் தலைமை தாங்கினார். வடுகபட்டி பேரூராட்சி தலைவர்

நடேசன், விசிக தொகுதி செயலாளர் ஆண்டவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணை அமைப்பாளர் அருணாச்சலம் மற்றும் திமுக நிர்வாகிகள், வடுகபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

இளைஞர்களின் பங்கேற்பு இப்போட்டியில் வடுகபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு நோக்கம் திராவிடப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையிலும், வருங்காலத் தலைமுறையினரிடையே உடல் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தப் போட்டி அமைந்தது.

சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் 'சமத்துவ பொங்கல்' திருவிழாவினை முன்னெடுத்து, தற்போதைய அரசியல் சூழலில் "தமிழ்நாடு வெல்லட்டும்" என்ற முழக்கத்துடன் இந்தப் போட்டி ஒருங்கிணைக்கப்பட்டதுபரிசளிப்பு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார்  பாராட்டுத் தெரிவித்ததுடன், வெற்றி கோப்பைகளையும் பரிசுகளையும் வழங்கினார்.

Post a Comment

0 Comments