பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம்..... அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்


தூத்துக்குடியில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். 

2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்புடன் ரொக்கத்தொகை ரூ.3,000/- (ரூபாய் மூவாயிரம் மட்டும்) அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 957 நியாயவிலைக் கடைகளில் மொத்தம் 5,41,007 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த மொத்த குடும்ப அட்டைகளில் கூட்டுறவு, மகளிர் சுய உதவிக் குழு, தமிழ்நாடு வாணிக கழகக் கடைகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. 

இந்த நிலையில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.கீதா ஜீவன் தொடங்கி வைத்தார். 

Post a Comment

0 Comments