மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அங்காடிகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற துணை தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார்.பேரூர் கழக துணை செயலாளர் சட்டசெந்தில், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சேகர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளான ரூ 3000 ரொக்கத்துடன் கூடிய கரும்பு,ஜீனி, பச்சரிசி,புடவை,வேஷ்டிகள் அடங்கிய பொங்கல் தொகுப்பை வழங்கினார் அப்போது பேரூராட்சி மன்ற உறுப்பினர் காயத்திரி குமார்,ராஜஸ்ரீ தினேஷ், ராதிகா சசிகுமார்,சாந்தி சங்கர்,சுகன்யா சுரேஷ்,வார்டு செயலாளர் அச்சுதராமன்,மற்றும் பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு குடும்ப உறுப்பினர்கள் நீண்ட வரிசையில் நின்று பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை பெற்று கொண்டனர் இது பற்றி பொதுமக்கள் கூறும்போது பொங்களுக்காக தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ 3000 ரொக்கமாக கொடுத்துள்ளது எங்களை போன்ற ஏழை நடுந்தர மக்கள் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம் என்று மகிழ்ச்சி பொங்க தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

0 Comments