திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் அன்னை வசந்தம் கல்வியியல் சமூக நல அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு பணிகளை செய்து வருகின்றது. ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கென நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் நிலையில் இந்த ஆண்டு புத்தாண்டு மற்றும் பொங்கல் தினத்தை முன்னிட்டு அன்னை வசந்தம் அறக்கட்டளை சார்பில் 250 மாற்றுத்திறனாள் மற்றும் 100 தூய்மை பணியாளர்களுக்கு வாக்கர்,கை கட்டை,கால் கட்டை,நடை கட்டை,மூன்று புடி நடை கட்டை,10 கிலோ அரிசி,ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்கள்,புடவை,லுங்கி,டவள்,பிரியாணி உடன் தண்ணீர் பாட்டில் என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அன்னை வசந்தம் கல்வியியல் சமூகநல அறக்கட்டளையின் தலைவர் வசந்தகுமார், துணைத் தலைவர் ஆனந்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.நியமன பொன்னேரி நகர கவுன்சிலர் கருணாகரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி நகர திமுக செயலாளர் ரவிக்குமார்,பொன்னேரி நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை தரும் உரையை நிகழ்த்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அவர்களுடன் பொன்னேரி நகர்மன்ற வார்டு கவுன்சிலர்கள்,திமுக நிர்வாகிகள்,அன்னை வசந்தம் கல்வியில் சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள்,மாற்றுத் திறனாளிகளின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0 Comments