திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மாதவரத்தில் உள்ள ரானே எஞ்சின் வால்வு நிறுவனம் சார்பில் 37 வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலை பாதுகாப்பு விதியை பின் பற்றக்கோரி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணையாக சென்று பொதுமக்களுக்குதுண்டு பிரசுரங்களை வழங்கினர்.
வாகனங்கள் ஓட்டும்போது மது அருந்தக்கூடாது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் கார் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர் சுமார் இரண்டு கிலோ மீட்டர் பேரணி சென்று இறுதியாக அண்ணா சிலை அருகில் நிறைவடைந்தது அனைவரும் உறுதிமொழி ஏற்றனர் பின்னர் பொதுமக்களுடன் பேசிய போக்குவரத்து காவலர் சாலை விபத்துக்கள் ஏற்பட்டால் பொதுமக்கள் அதனைப் பார்த்து கடந்து செல்லாமல் காவல்துறைக்கும் அவசர உதவி எண்ணிற்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார் இந்த பேரணியில் ரானே எஞ்சின் வால்வு நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அலுவலர் இள கண்ணன், செந்தில், மற்றும் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 Comments