பாமக கட்சியில் தேர்தல் நெருங்கும் நிலையில் தற்போது உட்கட்சி பூசல்கள் என்பது அதிகரித்துவிட்டது. தந்தை மகன் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலையில் தாங்கள்தான் கட்சியின் தலைவர்கள் என தனித்தனியே சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் நிலையில் தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக கட்சியின் தலைவராக அங்கீகரித்துள்ளதால் ராமதாஸ் அது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைவதாக அன்புமணி தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ராமதாஸ் அதனை சட்டவிரோதம் என கூறிய நிலையில் இன்று கூட்டணி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் பாமக கட்சியின் எம்எல்ஏக்களை ராமதாஸ் தற் போது கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். அதன்படி மயிலம் எம்எல்ஏ சிவகுமார், மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் மற்றும் தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் இவர்களை அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

0 Comments